தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லதை மட்டுமே செய்

நல்லதை மட்டுமே செய்

நல்லதை மட்டுமே செய்


ADDED : டிச 11, 2013 01:12 PM

Google News

ADDED : டிச 11, 2013 01:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் எப்போதும் தன்னைச் சுற்றி தெய்வீகமணம் கமழச் செய்ய வேண்டுமானால், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.

* செயலுக்கேற்ற விளைவுகள் உங்களின் கற்பனையைப் பொறுத்து உண்டாவதில்லை. செயல்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

* கடவுள் அன்பு மலையாக இருக்கிறார். அவரிடத்தில் அன்புக்கு குறைவேதும் கிடையாது. அவரின் கருணையைப் பெற எளிதான வழி பக்தி ஒன்றே.

* மனிதனுக்கு கடவுள் சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார். ஆனால், அதோடு ஒரு நிபந்தனையும் இருக்கிறது. செய்யும் செயலுக்கேற்ப இன்ப, துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும்.

* பணம், பதவி, அதிகாரம் இவற்றைத் தேடி மனிதன் அலைகிறான். இதனால், மனிதப் பண்பு குறைந்து போய் மிருக நிலைக்கு ஆளாகி விட்டான்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us